ட்ரெண்டிங்

சேலத்தில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு!

 

ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை முன்னிட்டு காய்கறிகள் பூக்களின் தேவை அதிகரிப்பு.

 

சேலம் : ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை பண்டிகைகளை முன்னிட்டு சேலத்தில் மலர்களின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது.

 

விலையேற்றதை பொறுத்தவரை,கடந்த சில நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.500க்கு விற்ற குண்டுமல்லி தற்போது கிலோ ரூ.1,000க்கு உயர்ந்துள்ளது. அதேபோல் சன்னமல்லி கிலோ ரூ.750க்கும், அரளி மலர் கிலோ ரூ.250க்கும் விற்கப்படுகிறது.

சமந்தி, ரோஜா, கன்னகாம்பரம் உள்ளிட்ட பிற மலர்களும் அதிக விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

 

பூஜைக்கு மலர்கள் தவிர்க்க முடியாதவை,என்பதால் விலை அதிகமாக இருந்தாலும் வாங்க வேண்டிய கட்டாயம் உள்ளது,என பொதுமக்கள் கவலை தெரிவித்தனர்.

 

சேலம்,மட்டுமல்லாது சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து பூக்களின் வரத்து உள்ளது.ஆனால் தற்போதைய தேவை அதிகமாகவும்,வரத்து குறைவாகவும் இருப்பதால் விலை அதிகரித்துள்ளது.பண்டிகை நாளில் இது மேலும் உயரும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தனர்.

 

ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை என்பதால் பூ மார்க்கெட் மட்டுமின்றி காய்கறி சந்தைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.