மேட்டூர் அனல் மின் நிலையம் செல்லும் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி தலை துண்டாகி முதியவர் ப** சம்பவத்தால் பரபரப்பு..
மேட்டூர் அனல்மின் நிலையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் முதியவர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் தலை மற்றும் உடல் தனியாக சாலையில் கிடப்பதாக கருமலைக்கூடல் காவல் நிலையத்திற்கு அந்த வழியாக சென்றவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முதியவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் இறந்து போன நபர் சின்னக்காவூர் பகுதியை சேர்ந்த முதியவர் வெங்கட்ராமன்(70). என்பதும் இவர் அனல்மின் நிலையத்தில் உள்ள கருப்பசாமி கோவில் பூசாரியாக வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது. மேலும் சைக்கிளில் சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி தலை துண்டிக்கப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என கருமலை கூடல் போலீசார் தகவல் தெரிவித்தனர். அப்பகுதியில் வீடுகளில் பொருத்தப்பட்டு இருக்கும் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.இறந்து போன முதியவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.

-gHtCjrmTp5.jpg )
