தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காகவும் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் சேலம் வழியாக கொச்சுவேலி மற்றும் பெங்களூரு இடையே அந்தியோதயா சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
வரும் நவ.04-ம் தேதி கொச்சுவேலியில் இருந்து பெங்களூருவுக்கும் (ரயில் எண் 06039) , மறுமார்க்கத்தில், வரும் நவ.05- ம் தேதி பெங்களூருவில் இருந்து கொச்சுவேலிக்கும் (ரயில் எண் 06040) அந்தியோதயா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சிறப்பு ரயில், கொல்லம், கோட்டயம், பாலக்காடு, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, எர்ணாகுளம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும்.
இந்த சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு என்ற https://www.irctc.co.in/nget/train-search இணையதளத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



-SXgDfGgJfO.jpg)