ட்ரெண்டிங்

சரிந்து வரும் நீர்மட்டம்....வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைப்பு! 

மேட்டூர் அணையில் இருந்து இன்னும் ஒன்பது நாட்களுக்கு மட்டுமே பாசனத்திற்கான தண்ணீர் திறந்துவிட முடியும் என்று தமிழக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது. 

கர்நாடகா அணைகளில் 220 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. கடந்த ஆகஸ்ட் 8- ஆம் தேதி வரை தமிழகத்திற்கு தர வேண்டிய 37 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகா அரசு வழங்காமல் இருந்து வருகிறது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு தற்போதைய நிலவரப்படி வினாடிக்கு சுமார் 5,000 கனஅடி தண்ணீர் மட்டுமே வந்துக் கொண்டிருக்கிறது. 

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வரும் நிலையில், இன்னும் ஒன்பது நாட்களுக்கு மட்டுமே அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீரைத் திறந்துவிட முடியும் என தமிழக நீர்வளத்துறைத் தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 5,140 கனஅடியாக உள்ளது. இதையடுத்து, அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் வினாடிக்கு 6,000 கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டமும் 55.54 அடியாகக் குறைந்துள்ளது. நீர் இருப்பு 21.47 டி.எம்.சி.யாக உள்ளது.