சேலம் மாநகரில் மதுவிலக்கு குற்ற வழக்குகளின் போது கைப்பற்றப்பட்டு, தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1414ன் கீழ் அரசுக்கு பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் 49 வாகனங்கள் (3 நான்கு சக்கர வாகனங்கள், 2 மூன்று சக்கர வாகனங்கள், 44 இருசக்கர வாகனங்கள்) டிசம்பர் 23-ம் தேதி பொதுமக்களுக்கான ஏலத்திற்கு விடப்படுகின்றன.
ஏலத்திற்கு முன் வாகனங்களை நேரில் பார்வையிட டிசம்பர் 22-ம் தேதி, காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை, சேலம் மாநகர லைன்மேட் பகுதியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஏலத்தில் பங்கேற்க முன்பணமாக, இருசக்கர வாகனங்களுக்கு – ரூ.5,000,மூன்று சக்கர வாகனங்களுக்கு – ரூ.7,000,நான்கு சக்கர வாகனங்களுக்கு – ரூ.10,000 செலுத்த வேண்டியது அவசியம். இந்த முன்பணத் தொகை டிசம்பர் 23-ம் தேதி காலை 8.00 மணி முதல் 10.00 மணிக்குள் அதே மைதானத்தில் செலுத்தப்பட வேண்டும். முன்பணம் செலுத்தும் நபர்களுக்கே ஏலத்தில் பங்கேற்க அனுமதி வழங்கப்படுமென காவல் துறை தெரிவித்துள்ளது.
வாகனத்தை ஏலத்தில் எடுத்த உடனே, ஏலத் தொகை மற்றும் அதனுடன் சேர்த்து சரக்கு மற்றும் சேவை வரி (GST) முழுத் தொகையையும் செலுத்தி, அதே நேரத்தில் வாகனத்தை பெற்றுச்செல்ல வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு:
காவல் துணை ஆணையாளர், தலைமையிடம் – சேலம் மாநகரம் மதுவிலக்கு அமல் பிரிவு, சேலம் மாநகரம் தொடர்பு எண்கள்: 0427-2431200, 94981 02546, 94981 66304

--(7)-VH9LCfzRUQ.jpg )
