ஆன்மிகம்

கோட்டை மாரியம்மன் கோயிலில் தமிழில் கும்பாபிஷேகம் நடத்தப்படுமா?- சட்டப்பேரவையில் அருள் எம்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நேற்று (அக்.09) காலை 10.00 மணிக்கு சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கியது. கூட்டத்தொடரில், சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு, சம்மந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.

 

அந்த வகையில், சட்டப்பேரவையில் பேசிய பா.ம.க.வைச் சேர்ந்த சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அருள், "இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள சேலம் கோட்டை அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் வரும் அக்டோபர் 08- ஆம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இந்த கோயிலில் தமிழில் கும்பாபிஷேகம் நடத்தப்படுமா? அதேபோல், தமிழகத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் தமிழில் கும்பாபிஷேகம் நடத்தப்படுமா?" என்று கேள்வி எழுப்பினார்.

 

இதற்கு பதிலளித்த இந்து, சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, "சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் தமிழில் நடத்தப்படும்" என்று உறுதியளித்தார்.

 

இதனிடையே, சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, அக்டோபர் 27- ஆம் தேதி சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்க மாவட்ட நிர்வாகத்துக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.