ட்ரெண்டிங்

சேலத்தில் பாமகவினர் ஆர்ப்பாட்டம் !!

 

சேலம் கோட்டை மைதானத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பாமகவினர் ஆர்ப்பாட்டம் ...

வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10.5% தனி இட ஒதுக்கீடு வழங்கிடவும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தியும் கோட்டை மைதானத்தில் பாமக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாநில இணை பொது செயலாளர் அருள் எம்எல்ஏ தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட செயலாளர் கதிர் இராசரத்தினம் வரவேற்றார். இதில் வன்னியர் சங்க மாநில செயலாளர் தங்க.அய்யாசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் அருள் எம்.எல்.ஏ பேசியதாவது. 

பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழகம் முழுவதும் உள்ள 96 ஆயிரம் கிராமங்களுக்கு நேரடியாக சென்று 46 ஆண்டு காலம் பொதுவாழ்வில் ஈடுபட்டு இந்த இயக்கத்தை உருவாக்கியுள்ளார். ஆனால் சிலர் பாமகவை அபகரிக்க முயற்சி செய்து வருகின்றனர். பெற்ற தந்தையையே கொலை செய்ய அன்புமணி முயற்சி செய்தது வேதனை அளிக்கிறது. ஒட்டுமொத்த வன்னியர்களும் ராமதாஸ் கீழ் தான் இருக்கின்றனர். ஆனால் அன்புமணிக்கு பின்னால் துரோகிகளும் கொலைகார கைக்கூலி கூட்டங்கள்தான் உள்ளன. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது 23 எம்எல்ஏ சீட்டுகளை வாங்கியது மட்டுமல்லாமல், 10.5% இட ஒதுக்கீடு பெற்று தந்தவர் ராமதாஸ். தமிழகத்தில் உள்ள அனைத்து சமுதாய மக்களும் பயன்பெறும் வகையில் உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்த வேண்டும் என தெரிவித்தார்.