மேட்டூர் அணையின் நீர்மட்டம் 71ஆவது முறையாக 100 அடியை எட்டியது. 405 நாட்களுக்கு பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. கடந்த ஜூலை 04- ஆம் தேதி 39.67 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. 23 நாட்களில் அணையின் நீர்மட்டம் நீர்வரத்து அதிகரிப்பால் 60 அடி உயர்ந்துள்ளது.
காவிரியில் இருந்து மேட்டூர் அணைக்கு சுமார் 1 லட்சம் கனஅடி தண்ணீர் வந்துக் கொண்டிருக்கும் நிலையில், அணை விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் ஒரு வாரத்திற்குள் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி, கர்நாடக அணைகளில் இருந்து 1.30 லட்சம் கனஅடி தண்ணீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது.


