கோவில் சொத்தை அபகரித்துக் கொண்டு நிர்வாகத்தை ஒப்படைக்க மிரட்டல் விடும் நபர்கள் மீது நடவடிக்கை கோரி பாதிக்கப்பட்ட மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார்..
சேலம் மாவட்டம் எடப்பாடி கே வடுகபட்டி அஞ்சல் அழகம்பாளையம் பகுதியை சேர்ந்த கந்தசாமி மற்றும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் சிலர் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர் அதிகாரியை சந்தித்து புகார் மனு அளித்தனர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே அழகம்பாளையம் அருகே பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த பஞ்சு மாதா அருள்மிகு ஸ்ரீ பெருமாள் சுவாமி கோவில் உள்ளது இந்த கோவிலில் எங்கள் குடும்ப குலதெய்வம் மட்டுமில்லாமல் அந்தப் பகுதியில் வாழும் 5000 குடும்பத்திற்கும் இந்த கோவில் குல தெய்வமாக இருந்து வருகிறது இந்த கோவிலில் கந்தசாமி குடும்பத்தினர் பூஜை செய்து நிர்வகித்து வருகின்றனர் இந்த நிலையில் அவர்களது உறவினர்களான ரவி மற்றும் கோவிந்தன் உள்ளிட்ட சிலர் கோவில் நிர்வாகத்தை தங்களிடம் ஒப்படைத்துவிட்டு எங்கள் குடும்பத்தினரை வெளியே செல்ல வேண்டும் எனவும் மேலும் கோவில் உண்டியலில் இருந்த பணம் மற்றும் நகையை அபகரித்து உள்ளனர் இதுவரை 20 லட்ச ரூபாய் வரை அபகரித்துள்ளனர் தற்போது கோவிலுக்கு சொந்தமான 70 பவுன் நகை உள்ளது அந்த நகை மற்றும் நிர்வாகத்தை ஒப்படைக்க சொல்லி மிரட்டல் விடுக்கின்றனர் இது குறித்து எடப்பாடி போலீசில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை மேலும் போலீசார் அவர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு சாதகமாக செயல்பட்டு வருகின்றனர் இந்த கோவில் விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தற்போது வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வர உள்ளது இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவில் நிர்வாகத்தையும் சொத்துக்களையும் தங்களிடம் ஒப்படைத்துவிட்டு செல்ல வேண்டும் என கூறி மிரட்டல் விடுத்தினர் இதனால் எங்களால் அங்கு கோவிலை பராமரிக்க முடியாமலும் நித்திய பூஜைகள் செய்ய முடியாமலும் தவித்து வருகிறோம் எனவே கோவில் நிர்வாகத்தை கேட்டு மிரட்டல் விடுத்தும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கோவில் நிர்வாகத்தை நாங்களே பராமரிப்பதற்கு ஆவணம் செய்ய வேண்டும் இல்லை என்றால் இந்த கோவிலை அறநிலைத்துறை நிர்வாகமே எடுத்துக் கொள்ளலாம் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது
இதுகுறித்து கோவிலை பராமரித்து வரும் கந்தசாமி குறுகையில் கோயில் பணிகளை செய்ய விடாமலும் பணத்தை கேட்டும் நகைகளை கேட்டும் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகின்றனர் எங்களால் கோவிலில் நிம்மதியாக இருக்க முடியவில்லை மாவட்ட நிர்வாகம் இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து விசாரணை நடத்தி மிரட்டல் விடுத்து வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அவ்வாறு இல்லை என்றால் கோவில் நிர்வாகத்தை அறநிலை துறை எடுத்துக் கொள்ள வேண்டுமென தெரிவித்தார்.

-zTrPB7qNqv.jpg )
-SXgDfGgJfO.jpg)