ட்ரெண்டிங்

சேலம் மாநகராட்சிக்கு எரியூட்டிகள், வாகனத்தை வழங்கிய வங்கி!

ஃபெடரல் வங்கியின் கூட்டாண்மை சமூக பொறுப்பு நிதியில் இருந்து ரூபாய் 4 லட்சம் மதிப்பிலான 10 எரியூட்டிகளையும், ஜனா ஸ்மால் பைனான்ஸ் வங்கியின் கூட்டாண்மை சமூகப் பொறுப்பு நிதி ரூபாய் 12 லட்சம் மதிப்பிலான மருந்து வாகனத்தையும் சேலம் மாநகராட்சி ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் இ.ஆ.ப., ஆகியோரிடம் வங்கி நிர்வாகிகள் மற்றும் பைனான்ஸ் வங்கியின் நிர்வாகிகள் தனித்தனியே வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி துணை ஆணையாளர் அசோக்குமார், பொது சுகாதார குழுத் தலைவர் சரவணன், துணை இயக்குநரும், மாநகர நல அலுவலருமான யோகானந், ஃபெடரல் வங்கியின் நிலைய மேலாளர் மனு மற்றும் ஜனா ஸ்மால் பைனான்ஸ் வங்கியின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.