பஜாஜ் நிறுவனம், CNG- யால் இயங்கும் இருசக்கர வாகனத்தை பஜாஜ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் நடந்த நிகழ்ச்சியில் CNG எரிபொருளைக் கொண்டு இயங்கும் இருசக்கர வாகனத்தை மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிமுகப்படுத்தி வைத்தார். நிகழ்ச்சியில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் நிறுவனர் ராஜிவ் பஜாஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
உலகிலேயே முதன்முறையாக சுற்றுச்சூழலுக்கு உகந்த CNG எரிப்பொருளைக் கொண்டு இயங்கும் இருசக்கர வாகனத்தை பஜாஜ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பஜாஜ் நிறுவனத்தின் CNG வாகனத்தின் சிறப்பம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்!
125 சிசி திறன் கொண்ட இந்த CNG வாகனத்தின் ஆரம்ப விலை ரூபாய் 95,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தாது; அதேபோல், குறைந்த எரிபொருளில் அதிக கிலோ மீட்டர் மைலேஜ் தரும். முதற்கட்டமாக, இந்த வாகனம் குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் உள்ள ஷோரூம்களில் விற்பனை வந்துள்ளது.
படிப்படியாக மற்ற நகரங்களுக்கும் CNG இருசக்கர வாகனம் விற்பனை வரும் என பஜாஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது.


-SXgDfGgJfO.jpg)