ட்ரெண்டிங்

சபரிமலை சீசன் சேலம் வழியே மேலும் 2 சிறப்பு ரயில் இயக்கம் !!!

 

சபரிமலை சீசனையொட்டி சேலம் வழியே மேலும் 2 சிறப்பு மபில் இயங்கப்படுகிறது. இந்த ரயில்களுக்கு இன்று காலை டிக்கெட் முன்பதிவு துவங்குகிறது 

சபரிமலை அய்யப்பன் கோயில் மண்டல் பூஜையையொட்டி மகாராஷ்ர் ஆந்திரா, தெலங்கானா,கர்நாடகா  தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ரயில்களில் அதிகப்படியான பக்தர்கள் சபரிமலைக்கு செல்கின்றனர்.இதற்காக சிறப்பு ரயில்களை ரயில்வே நிர்வாகம் இயங்கிவருகிறது.

இந்த வகையில் சேலம் வழியே மேலும் 2 சிறப்பு ரயில்களை இயக்குவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இதன்படி, நரசாபூர்-கொல்லம் சிறப்பு ரயில் வரும் 27ம் தேதி இயக்கப்படுகிறது. நரசாபூரில் மதியம் 1,மணிக்கு புறப்பட்டு, காசிப்பேட்டை,வாரங்கள்,விஜயவாடா, நெல்லூர் ரேணிகுண்டா, திருப்பதி, சித்தூர், காட்பாடி,ஜோலார்பேட்டை வழியே சேலத்திற்கு அடுத்த நாள் காலை 8.30 மணிக்கு வந்து ஈரோட்டிற்கு காலை 9.35 க்கும், திருப்பூருக்கு காலை 10.28 க்கும். போத்தனுர்க்கு மதியம் 12 மணிக்கும் சென்று,பாலக்காடு, திருச்சூர். எர்ணாகுளம், கோட்டயம், திருவல்லா,செங்கானூர்,காயங்குளம் வழியே கொல்லத்திற்கு இரவு 10 மணிக்கு சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில், கொல்லம்-நரசாபூர் சிறப்பு ரயில் வரும் 29ம் தேதி இயக்கப்படுகிறது.கொல்லத்தில் அதிகாலை 2.30 மணிக்கு புறப்பட்டு,போத்தனூருக்கு காலை 11.10க்கும், திருப்பூருக்கு மதியம் 12.15க்கும். ஈரோட்டிற்கு மதியம் 1.15 க்கும், சேலத்திற்கு மதியம் 2.22க்கும் வந்து, காட்பாடி, திருப்பதி, விஜயவாடா வழியே நரசாபூருக்கு அடுத்தநாள் மதியம் 12.30 மணிக்கு சென்றடைகிறது.இதேபோல், சார்லப்பள்ளி-கொல்லம் சிறப்பு ரயில் வரும் ஜனவரி 10, 17ம் தேதிகளில் இயக்கப்படுகிறது. சாரலப்பள்ளியில் காலை 10.30 மணிக்கு புறப்பட்டு, ராய்சூர், குண்டக்கல், தர்மவரம், சித்தூர், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியே சேலத்திற்கு அடுத்த நாள் காலை 8.30க்கும்,ஈரோட்டிற்கு காலை 9.35க்கும். திருப்பூருக்கு காலை 10,28க்கும், போத்தனூருக்கு மதியம் 12 மணிக்கும் சென்று,பாலக்காடு,எர்ணாகுளம்,வழியே கொல்லத்திற்கு இரவு 10 மணிக்கு சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில் கொல்லம்-சார்லப்பள்ளி சிறப்பு ரயில் (07128) வரும் ஜனவரி 12, 19ம் தேதிகளில் இயக் கப்படுகிறது.கொல்லத்தில் அதிகாலை 2.30 மணிக்கு புறப்பட்டு,போத்தனூருக்கு காலை 11.10க்கும், திருப்பூ ருக்கு மதியம் 12.15க்கும், ஈரோட்டிற்கு மதியம் 1.15க்கும், சேலத்திற்கு மதியம் 2.22க்கும் வந்து,காட்பாடி, ராய்சூர்,வழியே சார்லப்பள்ளிக்கு அடுத்தநாள் மதியம் 1.20 மணிக்கு சென்றடைகிறது.இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று (9ம் தேதி) காலை 6 மணிக்கு துவங்குகிறது. இதனை பயணிகள் பயன்படுத்திக் கொள்ள தெற்கு ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.