ட்ரெண்டிங்

பிப்.12- ல் தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர்!

 

பிப்ரவரி 12- ஆம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ளதாக தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

 

"தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் பிப்ரவரி 12- ஆம் தேதி காலை 10.00 மணிக்கு தொடங்குகிறது. தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வரும் பிப்ரவரி 19- ஆம் தேதி தாக்கல் செய்கிறார்.

 

பிப்ரவரி 20- ஆம் தேதி முன்பண மானிய கோரிக்கையும், பிப்ரவரி 21- ஆம் தேதி முன்பண செலவு கோரிக்கையும் விவாதிக்கப்படுகிறது. சட்டப்பேரவை நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.