ட்ரெண்டிங்

மின் பணியாளர்களுக்கு எச்சரிக்கை மணி ஒலிக்கும் கருவி! 

தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் தவறுதலாகவோ, கவனக்குறைவின் காரணமாக மின்னோட்டம் உள்ள பகுதிகளில் பணிகள் மேற்கொள்ளும்போது மின் விபத்து தடுக்கும் நடவடிக்கையாக, எச்சரிக்கை மணி ஒலிக்கும் விதமான கருவிகள், சேலம் மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட களபணியாளர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. 

இக்கருவி கையில் கடிகாரம் போல கட்டிக் கொள்ளலாம். கையில் கட்டிக் கொண்டு, கம்பத்தில் ஏறும்போது, அந்த லைனில் மின்னூட்டம் இருந்தால் 4 அடி தூரத்திலிருக்கும் போதே எச்சரிக்கை ஒலி எழுப்பும். இதனால் களப்பணியாளர்கள் தங்களை காத்துக்கொள்ள உதவும். சேலம் மின் பகிர்மனத்திற்குட்பட்ட மரவனேரி பிரிவு அலுவலக வளாகத்தில் 15/05/2024 அன்று பணியாளர்களுக்கு மேற்பார்வை பொறியாளர் சேலம் மின் பகிர்மான வட்டம், சேலம் தண்டபானியின் தலைமையில் மரவனேரி பிரிவு அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. 

எனவே, சேலம் மின் பகிர்மானத்திற்குட்பட்ட அனைத்து பணியாளர்களையும், பணிகள் மேற்கொள்வதற்கு முன்னர், இக்கருவிகளை கையில் கட்டிக்கொண்ட பின்னரே பணிகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.