ட்ரெண்டிங்

அவற்றை முழுமையாகப் பயன்படுத்தி சிறந்த மாணவர்களாக உருவாக வேண்டும்-சோனா கல்லூரி முதல்வர் செந

சேலம் சோனா கல்லூரியில் 2023-24- ஆம் கல்வியாண்டிற்கான எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.இ. ஆகிய முதுநிலைப் படிப்பு மாணவர்களுக்கான முதலாமாண்டு வகுப்புகள் துவக்கவிழா கல்லூரி வளாகத்தில் உள்ள அரங்கத்தில் நடைபெற்றது.

 

கல்லூரியின் துணைத் தலைவர் தியாகுவள்ளியப்பா தலைமையில் நடைபெற்ற விழாவில், சிறப்பு விருந்தினராக சென்னை ஆர்வி இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக பங்குதாரர் சிவக்குமார், மற்றும் உத்தரப்பிரதேச அமிட்டி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மற்றும் இயக்குனர் சுஜாதா கண்டாய் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

 

எம்.பி.ஏ. துறைத்தலைவர் அஞ்சனி விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று பேசினார். முன்னதாக கல்லூரியின் முதல்வர் எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமார், கல்லூரியின் நிர்வாகத்தினர் மற்றும் முதலாமாண்டு மாணவ மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.

 

"மாணவ, மாணவிகளுக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்க சோனா கல்லூரி காத்திருப்பதாகவும், அவற்றை முழுமையாக பயன்படுத்தி சிறந்த மாணவர்களாக அவர்கள் உருவாக வேண்டும்" என்று கல்லூரியின் முதல்வர் செந்தில்குமார் அறிவுறுத்தினார்.

 

விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சிவக்குமார் கூறுகையில், "இந்திய நாட்டில் பல்வேறு துறையில் தொழில் முனைவோர் வாய்ப்புகள் ஏராளமாக உள்ளது. தேசத்தின் வளர்ச்சிக்கும், உங்களின் வளர்ச்சிக்கும் சோனா கல்வி குழுமம் ஒரு பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்றார்

 

கல்லூரியின் துணைத் தலைவர் தியாகுவள்ளியப்பா கூறுகையில்,சிறந்த மேலாண்மைக் கல்வியோடு சூழலை எதிர்கொள்ளும் தனித்திறனையும் மேம்படுத்திக் கொண்டால் மட்டுமே, இந்த காலகட்டத்தில் நிலைத்து நிற்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

 

இந்த விழாவில் சோனா கலை கல்லூரி முதல்வர் ஜி.எம்.காதர் நவாஸ், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் பங்கேற்றனர்.