சேலம் மாநகரம் ஜாகீர் அம்மாப்பாளையம் பகுதியில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்க மேக்னசைட் நிறுவனத்திற்கு சொந்தமான 184.5 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு சுமார் 360 கோடி மதிப்பீட்டில் திட்டத்தை துவக்கியுள்ளனர். இந்த இடத்தில் யான் கலரிங் பார்க் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் 21 சாயப்பட்டறைகளை அமைக்க கட்டுமானப்பணிகள் துவக்கப்பட்டது.சாயப்பட்டறைகள் அமைவதால் இப்பகுதியில் நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படும் என இப்பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்,மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் சாயப்பட்டறகள்,சம்மந்தப்பட்ட பகுதியை சிபிஐ(எம்) மாநில செயலாளர் பெ.சண்முகம் நேரில் ஆய்வு செய்து பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து செய்தியாளர்களை சந்தித்தார்.
அதில் அவர் பேசியதாவது ;
சேலம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியில் சாயப்பட்டறை தொழிலுக்கான அறிவிப்பை அரசு அறிவித்து அதற்கான பண்களை செய்து வருகிறது. மண்வளத்தையும் நீர்வளத்தையும் அழிக்கும்வகையில் எந்த தொழிலும் வருவது தமிழ்நாட்டு நலனுக்கும் தமிழக மக்களுக்கும் நல்லதல்ல. திராவிட முன்னேற்ற கழக அரசு சுற்றுச்சூழல் சம்மந்தமாக அரசுக்கு ஆலோசனை வழங்கும் வகையில் மாநில அளவில் ஆலோசனைகளை பெற்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் சேலம் மாநகராட்சிக்குட்பட்ட ஜாகீர் அம்மாபாளையம் பகுதியில் மேக்கனசைட் நினுவனத்திற்கு சொந்தமான இடத்தில் சாயப்பட்டறை அமைப்பது இப்பகுதி மக்கள் மத்தியில் மிகப்பெறிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நிலத்தடி நீர், மண்வளம், சுற்றுச்சூழல் மாசுபட்டு மக்கள் வாழ்வதற்கு இடையூறாக இருக்கும் என்ற அச்சம் இப்பகுதி பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
பொதுமக்களின் அச்சத்தை போக்கவேண்டியது மாநில அரசின் கடமையாகும். இத்தகைய சாயப்பட்டறைகள் இயங்க சுமார் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும். எங்கிருந்து தண்ணீர் வரும் என அதிகாரிகள் சொல்ல மறுக்கிறார்கள். சம்மந்தப்பட்ட இடத்தில் ஏரி, ஆறு போன்ற எந்த நீர் ஆதாரம் இல்லாத நிலை உள்ளது. தினந்தோறும் 20 லட்சம் லிட்டர் நிலத்தடி நீரை எடுத்தால் இப்பகுதி முழுவதும் உள்ள நீர் ஆதாரம் முழுவதும் உறிஞ்சப்பட்டு பாதிப்பு ஏற்படும். ஆக மக்கள் எழுப்பும் சந்தேகங்களை தீர்க்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. மக்களுக்கு உள்ள எல்லா பிரச்சனைகளுக்கும் விளக்கத்தை அளித்து, மக்களின் ஒத்துழைப்போடு திட்டத்தை செயல்படுத்த வேண்டுமே தவிர, மக்கள் எதிர்ப்பை மீறி திட்டத்தை செயல்படுவது மாநில அரசிற்கு நல்ல பெயரை ஏற்படுத்தி தராது.
தமிழக அரசை கேட்டுக்கொள்வது என்னவென்றால் உடனடியாக இத்திட்டத்தை நிறுத்திவிட்டு, மக்கள் கேட்கும் விளக்கங்களுக்கு மாநில அரசும் மாவட்ட நிர்வாகமும் முன்வர வேண்டும். மக்கள் ஒத்துழைப்புடன் திட்டத்தை நிறைவேற்றினால் அந்த திட்டம் வரவேற்பு பெறும். தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த காலங்களில் பூஜ்ஜியம் டிகிரி மாசு கட்டுப்படுத்தாத நிலைதாதான் உள்ளது. தமிழக சுற்றுச்சூழல் துறை அதை கண்காணிப்பதில்லை என்ற புகார்கள் உள்ளது. பூஜ்ஜியம் டிகிரி மாசு பூமிக்குள் செல்லாது என அரசு கூறுவது மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. எனவே சாயப்பட்டறைகளை தவிர்க்க தமிழக அரசு என்ன செய்ய வேண்டும் என யோசிக்க வேண்டும்.
சாயப்பட்டறைகளை மக்களுக்கு பாதிப்பு இல்லாத பகுதியில் அமைக்க வேறு இடத்தை தேர்வு செய்ய யோசிக்க வேண்டும். கனிமவளம் மிக்க மேக்னசைட் பகுதியில் இந்த திட்டத்தை அமைப்பது பற்றி பறிசீலிக்க வேண்டும். கனிமவளம் அனைத்து பகுதியிலும் கிடைப்பத்தில்லை. அரசுக்கு சொந்தமான இடமாக இருந்தாலும், மேக்னசைட் இடத்தில் மாற்றுத்திட்டத்தை செயல்படுத்துவது பொறுத்தமானதா என அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்துகண்ணன், மேற்கு மாநகர செயலாளர் பி.கணேசன், மேற்கு மாநகரகுழு உறுப்பினர்கள், உள்ளிட்டு பாதிக்கப்பட் பொதுமக்கள் பங்கேற்றனர்.


