சேலத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சேலம் கோட்டை அழகிரிநாதர் சுவாமி கோயிலில் வரும் 30ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதற்கான ஆன்லைன் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
சேலம் கோட்டை அழகிரிநாதர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழா நடக்கும்.அதன்படி,நடப்பாண்டு சொர்க்க வாசல் திறப்பு விழாவை முன்னிட்டு வரும் 19ம் தேதி முதல் 29ம் தேதி வரை பகல்பத்து உற்சவம் நடக்கிறது.
வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு கோட்டை பெருமாள் கோவிலில் சிறப்பு நுழைவு கட்டணமாக ஒரு நபருக்கு ரூபாய் 22 ஆன்லைனில் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://tnhrce.gov.in என்ற இணையதளத்தில் முப்பதாம் தேதி வரை முன்பதிவு செய்யலாம். வரும் டிசம்பர் 30ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற உள்ளது.


