ட்ரெண்டிங்

சேலத்தில் கை குழந்தையுடன் இளம்பெண் தர்ணா !!!

 

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே கணவரின் வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்ததால்,இளம்பெண் தனது கைக்குழந்தையுடன் சாலையில் திடீர் தர்ணா போராட்டம்..

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே முத்து நாயக்கன் பட்டி பகுதி யைச் சேர்ந்தவர் பிரியதர்ஷினி (24). இவருக்கும், இளம்பிள்ளை அருகே மடத்தூர் பகுதியைச் சேர்ந்த தறி தொழிலாளி மதியழகன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்று இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில், கடந்த வருடம் மதியழகன் திடீரென இறந்து விட்டார்.அவரது முதலாமாண்டு நினைவு தினத்தை யொட்டி,நேற்று காலை பிரியதர்ஷினி தனது குழந் தையுடன் மடத்தூருக்கு சாமி கும்பிடுவதற்காக வந்துள்ளார்.ஆனால்,அவரது மாமனார் அன்புமணி மற்றும் உறவினர்கள் வீட்டிற்குள் விடாமல் தடுத்துள்ளனர்.இதுதொடர்பாக பிரியதர்ஷினி உறவினர்களுக்கும்,மதியழகன் உறவினர்களுக்கும் தகராறு ஏற்பட்டது.இதனையடுத்து, பிரிய தர்ஷினி நியாயம் கேட்டு இளம்பிள்ளை - சின்னப் பம்பட்டி சாலையில் வளையசெட்டிப்பட்டி பிரிவு பகுதியில் கைக்குழந்தையுடன் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால்,அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து மகுடஞ்சாவடி போலீசார் விரைந்து வந்து ப்ரியதர்சினியிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் போராட்டத்தை கைவிட்டு காவல் நிலையத்தில் புகாரளித்தார்.இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கபட்டு பரபரப்பு நிலவியது.