சேலம் மாவட்டம், எடப்பாடி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (அக்.23) நடந்த மக்கள் சந்திப்புத் திட்ட முகாமைத் துவக்கி வைத்த சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து, எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் கணினி மூலம் மனுக்கள் பதிவு செய்யப்பட்டு வருவதைப் பார்வையிட்டார்.
அத்துடன், பயனாளிகளுக்கு தமிழ்நாடு அரசின் நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் ராஜேந்திரன் வழங்கினார்.
இந்த முகாமில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி, நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


