ட்ரெண்டிங்

புதிய கட்டடங்களைத் திறந்து வைத்த அமைச்சர்!

சேலம் கோட்டை அருள்மிகு அழகிரிநாதர் சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் சொர்க்கவாசல் திறப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டிற்கான சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்ச்சி நிரல் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. 

வரும் ஜனவரி 10- ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 05.00 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாள்தோறும் மாலை 05.00 மணிக்கு மேல் அழகிரிநாத சுவாமி திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளல், திருமொழி வேதபாராயணம் சேவித்தல், திருவாராதனம், தீபாராதனை, தீர்த்த பிரசாதம், திருக்கொட்டாரத்தில் பக்தி உலாவுதல் போன்ற நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. 

வரும் ஜன.21- ஆம் தேதி வரை சொர்க்கவாசல் திறப்பு உற்சவம் நடைபெறவுள்ளது. இத்திருக்கோயிலில் அருள்மிகு அழகிரிநாத சுவாமி சன்னதி, தாயார் சன்னதி, …
[3:45 pm, 2/1/2025] Justnow Salem: புதிய கட்டடங்களைத் திறந்து வைத்த அமைச்சர்! 

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், உம்பிளிக்கம்பட்டியில் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடம், அங்கன்வாடி மையம் மற்றும் நடுப்பட்டியில் அங்கன்வாடி மையம் உள்ளிட்ட புதிய கட்டடங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப முன்னிலையில் இன்று (ஜன.01) சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் திறந்து வைத்தார். 

பின்னர் சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது,தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு துறைகளுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்கள். அதேபோன்று நவீன காலத்திற்கு ஏற்றவாறு அனைத்து பகுதிகளுக்கும் தொழில் வளர்ச்சி கிடைத்திடவும் இளைஞர்கள் மற்றும் பெண்கள் என அனைத்து தரப்பினருக்கான வேலைவாய்ப்பினை உறுதி செய்திடும் வகையில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்.

குறிப்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த கடந்த 2021- ஆம் ஆண்டு டிசம்பர் 11- ஆம் தேதி அன்று சேலத்தில் நடைபெற்ற விழாவில் அறிவித்ததற்கிணங்க, ஓமலூர் வட்டம், ஆணைகவுண்டன்பட்டி மற்றும் கருப்பூர் பகுதிகளை உள்ளடங்கிய நிலப்பரப்பளவில், சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ரூ.29.50 கோடி மதிப்பீட்டில், 55,000 சதுர அடி பரப்பளவில், தரை மற்றும் 3 தளங்கள் கொண்ட மினி டைடல் பூங்கா திறந்து வைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. 

இதன்மூலம் உள்ளூரைச் சேர்ந்த மென் பொறியாளர்கள் தங்கள் வீட்டின் அருகாமையிலேயே பணிபுரியும் வகையில் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று "கொலுசு உற்பத்தியில் தலைசிறந்து விளங்கக் கூடிய சேலம் மாவட்ட கொலுசு உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில் அரியாகவுண்டம்பட்டியில் 1.20 ஏக்கர் பரப்பளவில் ரூ.25.29 கோடி மதிப்பீட்டில் கொலுசு உற்பத்தியாளர்களுக்கான பன்மாடி உற்பத்தி மையக்கட்டடம் ஒரு தளத்திற்கு 34 கடைகள் வீதம் 3 தளங்களுடன் 102 கடைகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது.

மேலும், சேலம், சிப்காட் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைப்பதற்கு ஜாகீர் அம்மாபாளையத்தில் 120 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்படவுள்ளது. இதன் மூலம் சேலம் மண்டலத்தில் சுமார் 10,000 நபர்கள் நேரடியாகவும், 30,000 முதல் 40,000 நபர்கள் வரை மறைமுகமாகவும் பயனடைய வாய்ப்பாக அமையும்.

இதன்தொடர்ச்சியாக இன்றையதினம் சேலம் மாவட்டம், காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், உம்பிளிக்கம்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூபாய் 2,265 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஊராட்சிமன்ற அலுவலகக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் 2,697 அங்கன்வாடி மையங்கள் தற்போது செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடி மையக் கட்டடங்கள் புதிய வடிவமைப்புகளுடன் நவீனப்படுத்தப்பட்டு படிப்படியாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஊராட்சியின் சிறு கனிமங்கள் நிதியின் மூலம் தலா ரூபாய் 14 லட்சம் மதிப்பீட்டில் காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், உம்பிளிக்கம்பட்டி மற்றும் நடுப்பட்டி ஊராட்சிகளில் புதியதாகக் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டடங்கள் என மொத்தம் ரூபாய் 50,65 லட்சம் மதிப்பிலான 3 புதிய கட்டங்கள் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார். 

இந்நிகழ்வின்போது. உம்பிளிக்கம்பட்டி ஊராட்சிமன்றத் தலைவர் மரகதவள்ளி ராஜாராம், நடுப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் செல்வராணி வெற்றிவேல், உம்பிளிக்கம்பட்டி ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் ஜெயராணி சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.