சேலம் நவ.29
பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் டிசம்பர் 4-ம் தேதி சேலத்தில் மறியல் போராட்டம்...
பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் சேலம் கோட்டை மைதானத்தில் மாபெரும் மறியல் போராட்டம் நடைபெறும் என அனைத்து துறை ஊழியர் சங்க போராட்ட குழு கூட்டத்தில் அறிவிப்பு...
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஊழியர் சங்க போராட்ட குழு கூட்டம் நான்கு ரோடு பகுதியில் உள்ள தமிழ் சங்க அண்ணா நூலக மேல்மாடியில் சங்கத்தின் தலைவர் வெ. அர்த்தனாரி தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.குறிப்பாக பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய பயனளிப்பு ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்த வேண்டும். அரசு துறைகளில் காலியாக உள்ள லட்சக்கணக்கான காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். சத்துணவு ஊழியர்கள் அங்கன்வாடி ஊழியர்கள்,வருவாய் கிராம ஊழியர்கள் ஊர் புற நூலகர்கள் செவிலியர்கள் உள்ளிட்ட சிறப்பு கால முறை,தொகுப்பூதியம்,மதிப்பூதியத்தில் பணியாற்ற ஊழியர்களுக்கு காலமுறை ஓவியம் சட்டப்பூர்வ ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஏழாவது ஊதிய குழுவில் நிதி பலன்களை அரசின் உயர் அதிகாரிகளுக்கு மட்டும் வழங்கிவிட்டு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வழங்கப்படாத 21 மாத நிலுவைத் தொகையினை உடனடியாக வழங்க வேண்டும், அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தை தமிழக அரசை ஏற்று நடத்த வேண்டும்,காலை சிற்றுண்டி திட்டத்தினை அனைத்து பள்ளிகளுக்கும் விரிவு படுத்தி சத்துணவு மையங்கள் மூலமாக சத்துணவு ஊழியர்களை கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும்,பெண் அரசு ஊழியர்களுக்கு அரசு சிறப்பு செல்களை அமல்படுத்த வேண்டும்உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் கோட்டை மைதானத்தில் டிசம்பர் 4ஆம் தேதி மாபெரும் மறியல் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணை பொது செயலாளர் மகாலிங்கம் நடைபெற்ற கூட்டத்தில் போராட்டத்தை அறிவித்தார்.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சுரேஷ், பொருளாளர் சண்முகம், அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் ராஜ்குமார் அரசு ஊழியர் சங்க மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டு பலர் பங்கேற்றனர்.


