ட்ரெண்டிங்

போட்டிப்போட்டுக் கொண்டு வாங்கிய அரசு ஊழியர்கள்!

ஆட்சியர் அலுவலகத்துக்கு தக்காளியுடன் வந்த விவசாயிகள்....போட்டிப்போட்டுக் கொண்டு வாங்கிய அரசு ஊழியர்கள்! 

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (ஜூலை 25) காலை 11.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், விவசாய சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் சேலம், ஆத்தூர், வாழப்பாடி. கெங்கவல்லி, சங்ககிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். 

அப்போது, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். கூட்டத்தில், சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் மேனகா, வேளாண்மை இணை இயக்குநர் சிங்காரம், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிக்குமார் உள்பட பல்வேறு துறையைச் சேர்ந்த அரசு உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர். 


முன்னதாக, தக்காளியுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்த விவசாயிகள், அரசு ஊழியர்களுக்கு கிலோ ரூபாய் 80- க்கு தக்காளியை விற்பனை செய்தனர். தக்காளியை அரசு ஊழியர்கள் போட்டிப்போட்டு கொண்டு வாங்கிச் சென்றனர்.