ட்ரெண்டிங்

சேலம் கோட்டம் சார்பில் 250 சிறப்பு பஸ்கள் இயக்கம் !

 

சேலம், நாமக்கல், தர்மபுரி,கிருஷ்ணகிரி ஆகிய மாவட் டங்களை உள்ளடக்கிய சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் தினமும் 1900 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்தப்பேருந்துகள் பண்டிகை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்ப டுகிறது. 

அதன்படி, வார இறுதி நாளை யொட்டி இன்று (28ம் தேதி) முதல் டிசம்பர் 1ம் தேதி வரை 250 சிறப்பு பஸ்கள், மாற்று பஸ்கள்,தடநீட்டிப்பு மற்றும் வழித்தட பஸ்கள் மூலம் கூடுதல் நடைகள் இயக்கப்படுகிறது. 

இந்த சிறப்பு பஸ் கள் சேலம், பெங்களூரு, சென்னை கிளாம்பாக்கம், ஓசூர், கோவை, திருப்பூர், திருவண்ணாமலை, சிதம்ப ரம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்படுகிறது. 

சென்னையில் இருந்து சேலம், நாமக்கல்,ஓசூர்,தர்மபுரி,கிருஷ்ணகிரி,பாலக்கோடு,போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல் பென்னாகரம், ஊத்தங் கரை, அரூர், மேட்டூருக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. சேலத்தில் இருந்து சென்னை,திருச்சி,மதுரை,சிதம்பரம்,காஞ்சிபுரம்,பெங்களூரு, ஓசூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருப்பதிக்கும், பெங்களூரில் இருந்து சேலம்,திருவண்ணாமலை, ஈரோடு மற்றும் காஞ்சிபுரத்திற்கும், ஓசூரில் இருந்து சேலம்,சென்னை, புதுச்சேரி, கடலூர், திருச்சி, மதுரை, கோவை,திருப்பூருக்கும், நாமக்கல்லில் இருந்து ஆத்தூர்,செந்தாரப்பட்டிக்கும, ராசிபுரத்தில் இருந்து சென்னைக்கும், திருவண்ணாமலையில் இருந்து 

பெங்களூருக்கும்,ஈரோட்டில் இருந்து பெங்களூருக்கும்,திருச்சியில் இருந்து ஓசூருக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. 

அதேபோல் வரும் டிசம்பர் 3ம் தேதி கார்த்திகை தீபம் மற்றும் பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு 4 மற்றும் 5ம் தேதிகளில் பயணிகளின் வசதிக்காக சேலம், ஆத்தூர்,பெங்களூரு,தர்மபுரி,கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து டிசம்பர் 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை பயணிகளின் வசதிக்காக திருவண்ணாமலைக்கு 750 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. 

மேலும் சேலம்,தர்மபுரி,ஓசூர் ஆகிய பஸ்ஸ்டாண்டுகளில் இருந்து திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் சிறப்பு பஸ்களுக்கு டிசம்பர் 2ம் தேதி மாலை 4 மணி முதல் டிசம்பர் 4ம் தேதி மாலை 4 மணி வரை இரண்டு மணி நேரத்திற்கு ஒரு பஸ் வீதம் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.என சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.