ட்ரெண்டிங்

உழவர் நல சேவை மையம்-அமைக்க விண்ணப்பிக்கலாம் !!!

 

சேலம் மாவட்டத்தில் உழவர் நல சேவை மையங்கள் அமைக்க வேளாண் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்,

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் பிருந்தாதேவி தெரிவித்ததாவது,

வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சரின் 2025-26 ஆம் ஆண்டு வேளாண் நிதி நிலை அறிவிப்பின்படி ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் மானியத்துடன் உழவர் நல சேவை மையங்கள் வேளாண் பட்டதாரிகள் மூலம் 1000 எண்கள் அமைக்க அறிவிக்கப்பட்டுள்ளது.

உழவர்களின் நலன் காக்கும் பல்வேறு திட்டங்கள் அரசால் அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் மேலும் வேளாண் பட்டதாரிகளின் திறன் உழவர்களுக்கு உதவியாக இருந்து உற்பத்தியை உயர்த்தும் வகையிலும் வேளாண் பட்டதாரிகளை தொழில் முனைவோராக ஊக்குவிக்கவும் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் ரூ.10 முதல் ரூ.20 இலட்சம் மதிப்பில் உழவர் நல சேவை மையங்கள் அமைத்த 30 சதவீத மானியமாக ரூ.3 முதல் ரூ.5 இலட்சம் வரை வழங்கப்படும். மேலும் நவீன தொழில்நுட்பங்கள் வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டுதல் குறித்து ஆலோசனைகளும் வழங்கப்படும். 

இது தவிர முதல்வரின் உழவர் நல சேவை மையங்கள் மூலம் ஒரே இடத்தில் அனைத்து சேவைகளையும் விவசாயிகள் பெற முடியும். 

தொழில் முனைவோராகும் ஆர்வம் உள்ள வேளாண் பட்டதாரிகளுக்கு சுயதொழில் செய்ய வாய்ப்பு ஏற்படுத்துவதுடன் தொழில்நுட்பதிறனை மேம்படுத்தும் வகையில் பயிற்சியும் அளிக்கப்படும்.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பயனாளிகள் 20 முதல் 45 வயதுக்குட்பட்டோர்கள் வங்கியில் விரிவான திட்ட அறிக்கையுடன் கடன் பெற விண்ணப்பிக்க வேண்டும். வங்கி நடைமுறைகளை பின்பற்றி கடன் ஒப்புதல் பெற்ற பின் மானிய உதவி பெற www.tnagrisnet.tn.gov.in/kaviaDP/register ஆவணங்களை சமர்பித்து விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு வட்டார தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.