ட்ரெண்டிங்

“50 ஆண்டு அதிமுக பயணத்துக்கு முற்றுப்புள்ளி: செங்கோட்டையன் விஜயின் தவெகவில் இணைந்தார் !

 

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினார்.இதனால் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.இதையடுத்து செங்கோட்டையனை, அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

இதனிடையே செங்கோட்டையன்,நேற்று தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன், பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய்யின் அலுவலகத்தில் அவரைச் சந்தித்து 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு சென்ற செங்கோட்டையன் அவர்களை புஸ் ஆனந்தன் வரவேற்றார். இதையடுத்து செங்கோட்டையன் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். கட்சியின் நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளரக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். என தெரிவித்தனர்.

இந்த நிலையில் தவெக தலைவர் விஜய், தவெகவில் செங்கோட்டையன் இணைந்தது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

” 20 வயது இளைஞராக இருக்கும் போதே புரட்சித்தலைவர் எம்.ஜி.யார் அவர்களை நம்பி அவரின் மன்றத்தில் சேர்ந்தவர். இளம் வயதிலேயே எம்.எல்.ஏ என்னும் பெரிய பொறுப்பை ஏற்றவர், அவருடையே பயணத்தில் அக்கட்சியின் இரு பெரும் தலைவர்களின் நம்பிக்கைக்குரியவராக அரசியல் களத்தில் இருந்தவர். இப்படி 50 வருடமாக ஒரே இயக்கத்தில் இருந்த செங்கோட்டையன் செங்கோட்டையன் தவெகவில் இணைந்துள்ளார்.

அவர்களுடைய அரசியல் அனுபவமும், அவர்களுடைய அரசியல் களப் பணியும் தவெகவிற்கு ஒரு பெரிய உறுதுணையக இருக்கும் என்று நம்பிக்கையுடன், செங்கோட்டையன் அவர்களையும் அவரோடு தவெகவில் இணைந்திருக்கும் அனைவரையும் மக்கள் பணியாற்ற வரவேற்கிறேன்” என்று தெரிவித்தார்.

மேலும் அதிமுகவில் பல்வேறு பொறுப்புகள் வகித்து மூத்த தலைவராக இருந்த செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகத்தில் இணைத்தது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.