விளையாட்டு

இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சி! 

டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திற்கு சென்றது. பின்னர் அங்குள்ள கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் முதல் போட்டியாக இந்திய அணி, அயர்லாந்து அணியை சந்திக்கிறது. அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஓமன், அமெரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நேபாளம், தென்னாப்பிரிக்கா, பப்புவா நியூ கினியா, மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான், உகாண்டா, நமீமியா, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து உள்ளிட்ட அணிகள் கலந்துக் கொள்ளவிருக்கின்றனர். 

ஜூன் 09- ஆம் தேதி நடைபெறும் இந்தியா- பாகிஸ்தான் போட்டியை கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.