சேலம் மாவட்டம்.மேட்டூர் 840 மெகா வாட் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி கையாளும் பகுதியில் நடைமேடை சரிந்து கீழே விழுந்த விபத்தில் ஒப்பந்த தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலி.
மேட்டூரில் 840 மற்றும் 600 மெகாவாட் கொண்ட இரண்டு அனல் மின் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த இரண்டு அனல் மின் நிலையங்களிலும் நிரந்தரமாக 1,500 பேரும், ஒப்பந்த அடிப்படையில் 2,300 பேரும் வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தொட்டில் பட்டி பகுதியை சேர்ந்த கார்த்தி(40) கடந்த 15 ஆண்டுகளாக அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.இன்று நிலக்கரி கையாளும் பிரிவில் இயந்திர பராமரிப்பு பணியில் கார்த்தி வேலை செய்து கொண்டிருந்தார்.அப்போது நடைமேடை சரிந்து 60 அடி உயரத்தில் இருந்து கார்த்தி கீழே விழுந்தார்.படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலே கார்த்தி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இறந்து போன தொழிலாளிக்கு ரேவதி(35) என்ற மனைவியும்,கனிஷ்கா(13),ரிச்சிதா (11) என இரண்டு மகள்கள் உள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக கருமலை கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

-OxWnsithXS.jpeg )
-SXgDfGgJfO.jpg)