ட்ரெண்டிங்

மீண்டும் மலர்வாய் நூல் வெளியீட்டு விழா! 

சேலம் மத்திய கூட்டுறவு வங்கி எதிரில் உள்ள சாந்தாஸ்ரமம் ட்ரஸ்ட் அரங்கில் இன்று (மார்ச் 29) காலை 09.30 மணிக்கு நிமிர் இலக்கிய வட்டம், நிமிர் புத்தகப் பட்டறை சார்பில் எழுத்தாளர் நறுமுகை ஈஸ்வர் எழுதிய "மீண்டும் மலர்வாய்" நூல் வெளியீட்டு விழா மற்றும் கவியரங்கம் நடைபெற்றது. 

விழாவில், சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, நூலை வெளியிட கோவை காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் தையல்நாயகி பெற்றுக் கொண்டார். 

நிமிர் இலக்கிய வட்டத்தின் நிறுவனர் நிமிர் கா.பாபுசசிதரன் தலைமையில் நடந்த விழாவில், கவிஞர் பழ.புகழேந்தி, எழுத்துக் களம் தலைவர் கவிஞர் சூர்யநிலா, சேலம் யாவரும் கேளிர் தமிழ் மன்றத்தின் கவிஞர் மா.பாலசுப்ரமணியன், வரலாற்று நாவலாசிரியர் எழுத்தாளர் ஸ்ரீமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். எழுத்தாளர் நறுமுகை ஈஸ்வர் ஏற்புரையாற்றினர்.