மாதந்தோறும் மூன்று முறை மட்டுமே தண்ணீர் வழங்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு.
சேலம் மாநகராட்சி மாதாந்திர இயல்பு கூட்டத்தில் இன்று பரபரப்பு நிலவியது.
எதிர்க்கட்சித் தலைவர் யாதவமூர்த்தி மாநகர மக்களுக்கு மாதம் 3 முறை மட்டுமே தண்ணீர் வழங்கப்படுவதாகவும், மாநகராட்சி பணம் வீணாக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு முன்வைத்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் கூட்டத்திலிருந்து வெளியேறினர்.இந்த சம்பவத்தால் கூட்டத்தில் சில நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அதேபோல் மாநகராட்சி நிர்வாகம் மீது அதிமுக, திமுக, விசிக உள்ளிட்ட மாமன்ற உறுப்பினர்கள் அதிருப்தியில் உள்ளதாகவும்.மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையாளர் சிறப்பாக செயல்பட்டாலும்,
அதிகாரிகள் யாரும் தேவையான ஒத்துழைப்பை வழங்கவில்லை என குற்றச்சாட்டு முன்வைத்தனர்.

--(7)-nwzLp4AJ8Y.jpg )

