தமிழகம் முழுவதும்,தமிழர் மரபின் மிகப் பழமையான ஒளித் திருநாளான கார்த்திகை தீபத் திருவிழா நாளை மாநிலம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.திருக்குறள் காலத்திலிருந்தே “தீபம்” குறித்து குறிப்பிடும் அளவுக்கு தமிழரின் வாழ்வில் தீபம் ஒளி முக்கியத்துவம் பெற்றது. ஏராளமான பக்தர்கள், இந்நாளை மங்களகரமான நாளாகக் கருதி வீட்டின் வாசற்படி முதல் கோயில்களின் பரபரப்பான சுவர்கள்வரை அகல் தீபங்களை ஏற்றி வழிபாடு செய்வார்கள்.
திருவண்ணாமலை மலைமகுடத்தில் திருக்கார்த்திகை தீபம்..
இந்தத் திருவிழாவில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஏற்றப்படும் மகா தீபமே. நாளை மாலை சுமார் 6 மணியளவில் அருணாசல மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. பல்லாயிரம் லிட்டருக்கும் மேலான நெய்யால் தயாராகும் தீபக்கலசம் வெள்ளோட்டத்துடன் உயர்த்தப்படும் போது, அதை தரிசிப்பதற்காக உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர் திருவண்ணாமலைக்கு வருகை தருகின்றனர். திருவண்ணாமலை முழுவதும் பாதுகாப்பு பணிகளுக்காக ஏராளமான போலீசார் மற்றும் தன்னார்வலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
வீட்டுவாசலில் அகல் தீபம் – குடும்ப வளம், ஆரோக்கியத்திற்கான வேண்டுதல்
கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திரம் இணையும் இந்த நாளை முருகப்பெருமான்,சிவபெருமான், திருக்கார்த்திகை தீபநாயகி பக்தியில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.வீட்டின் வாசல், ஜன்னல், மாடிப்படிகள் என்பவற்றில் ஏற்றப்படும் அகல் தீபங்கள், தீயவற்றை அகற்றி நல்நெறி தரும்,குடும்ப ஒற்றுமையை வலுப்படுத்தும்,செல்வ வளம், உடல் ஆரோக்கியம் ஆகியவற்றை பெருக்கும் என்ற நம்பிக்கையுடன் ஏற்றப்படுகின்றன.
ஆகாச தீபம் முதல் தோட்டா தீபம் வரை – மரபின் பல வடிவங்கள்
தமிழகத்தின் பல பகுதிகளில் கார்த்திகையை முன்னிட்டு வண்ண வண்ண தீபங்கள் வைக்கப்படும் சிலர் ஆகாச தீபம் எனப்படும் உயர்த்தப்பட்ட தூண்களில் தீபம் வைப்பர்.சிலர் தொட்டில் தீபத்தை பூஜை அறையில் ஏற்றுவர். கிராம பகுதிகளில் உள்ள கோயில்கள், அம்மன் கோயில்கள் அனைத்தும் தீபாலங்காரத்துடன் காட்சியளிக்கும்.
அதேபோல் தமிழகத்தின் பெருநகரங்களில் தீப ஒளியால் அலங்கரிக்கும்,சென்னை,கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள கோயில்கள் மின்விளக்கு அலங்காரத்துடன் பண்டிகை கோலத்தை எட்டியுள்ளது.இரவு நேரத்தில் வீதிகள் முழுவதும் அகல் தீபங்களின் ஒளி திகழவுள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஒளியின் திருநாள் – ஆன்மீகத்தின் கார்த்திகை தீபம், பொருளாதார சிக்கல்கள், மன அழுத்தங்கள், இருள் நிறைந்த வாழ்க்கையில் வெளிச்சம் தரும் ஆன்மீக விழிப்புணர்வாகவும் கருதப்படுகிறது.ஒளி எங்கிருக்கிறதோ, அங்கிருந்து நன்மை ஆரம்பமாகிறது" என்ற சிந்தனையை எடுத்துரைக்கும் திருவிழாவாக உள்ளது.
தமிழகமெங்கும் நாளைய தினம் தீப்பொலிவோடு ஒளிரவுள்ள கார்த்திகை தீபத் திருநாள், பக்தர்கள் மனங்களில் ஆனந்தம் மற்றும் அமைதியை பொழியத் தயாராக உள்ளது.



-hcTFAGMRGb.jpg)