சேலம் மாவட்டம், ஏற்காடு வட்டாரம், சொனப்பாடி மலைக்கிராமத்தில் வசிக்கும் பழங்குடியினர் மக்களை மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்,மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
சேலத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் இன்று (19.11.2025) சேலம் மாவட்டம், ஏற்காடு வட்டாரம் குரும்பபட்டி கிராமத்தில் தொடங்கி கருங்காலி கிராமம் மற்றும் குடவம்பட்டி கிராமம் வழியாக 23.5 கி.மீ மலைபாதையில் நடந்தே சென்று சொனப்பாடி மலைக்கிராமத்தில் வசிக்கும் பழங்குடியினர் மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு வழங்கப்படும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை ஆய்வு மேற்கொண்டார்கள்.
அப்போது பேசிய அமைச்சர் :-
மக்களைத் தேடி மருத்துவம் எனும் திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் 05.08.2021 அன்று கிருஷ்ணகிரி மாவட்டம் சாமணப்பள்ளியில் தொடங்கப்பட்டது.இத்திட்டம் மூலம் 2.5 கோடி பேர் பயனடைத்திருப்பதை எண்ணி தமிழ்நாடு முதலமைச்சரை சமூக வலைத்தளப் பக்கத்தில் பாராட்டப்பட்டது. மேலும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு 79வது ஐ.நா. சபையின் பொதுக்கூட்டத்தின்போது, United Nation Intergracy Task Force Award 2024 என்கின்ற விருது வழங்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக இன்று சேலம் மாவட்டம், ஏற்காடு வட்டம், சொனப்பாடி மலைக்கிராமத்தில் வசிக்கும் பழங்குடியினர் மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு வழங்கப்படும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் குறித்து மாண்புமிகு அமைச்சர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள்.

-h0bdAbCTfT.jpeg )

