ஆவணப் படத்தில் காட்சிகளை பயன்படுத்த தடையில்லா சான்றிதழ் தந்தவர்களுக்கு நடிகை நயன்தாரா நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, நடிகை நயன்தாரா வெளியிட்டுள்ள அறிக்கையில், நமது Nayanthara: Beyond the Fairy Tale ஆவணப்படம் வெளியாகியிருக்கிறது. பல்வேறு மகிழ்வான தருணங்கள் அடங்கிய எனது திரைப் பயணத்தில், நாம் இணைந்து பணியாற்றிய திரைப்படங்கள் மிகவும் இன்றியமையாதது. அதனால் அந்த படங்கள் குறித்த நினைவுகளும், ஆவணப்படத்தில் இடம் பெற வேண்டும் என உங்களை அணுகிய போது எந்தவித தயக்கமோ, தாமதமோ இல்லாமல் தடையில்லா சான்றிதழ் வழங்கிய அந்த பேரன்பை என்றென்றும் நன்றியோடு நினைவில் வைத்துக் கொள்வேன்.
பாலிவுட்டில் ஷாருக்கான் மற்றும் அவரது மனைவிக்கு நன்றி தெரிவித்துள்ள நடிகை நயன்தாரா, தமிழ் திரையுலகில் கே.பாலசந்தர், உதயநிதி, ஞானவேல் ராஜா, ஏ.ஆர்.முருகதாஸுக்கு நன்றி தெரிவித்துள்ளார். நன்றி தெரிவித்து நயன்தாரா வெளியிட்டுள்ள பெயர் பட்டியலில் தனுஷ் பெயர் இடம் பெறவில்லை.
நானும் ரவுடிதான் படக்காட்சியைப் பயன்படுத்த நடிகர் தனுஷ் தடையில்லா சான்றிதழ் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



-SXgDfGgJfO.jpg)