ட்ரெண்டிங்

குளு குளுவென மாறிய ஏற்காடு – சுற்றுலாப் பயணிகள் உற்சாகம் !!!

 

சேலம் மாவட்டத்தின் முக்கிய மலைப்பகுதியாக உள்ள ஏற்காடு, வார இறுதி விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகளால் அதிக அளவில் வருகை...

ஏற்காட்டில் ,அண்ணா பூங்கா மான் பூங்கா,ஏரி பூங்கா,கண்ணாடி மாளிகை,படகு சவாரி,சேர்வராயன் மலை கோயில் ,பக்கோடா பாயிண்ட், என பல்வேறு சுற்றுலா பகுதிகளில் நவம்பர் மாதம் சுற்றுலா சீசனுக்கு பெரும் வரவேற்பு..

சேலம் மாவட்டத்தின் பிரபல மலைப்பகுதியாக உள்ள ஏற்காடு, வார இறுதி விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகளால் நிரம்பியது. வியூ பாயிண்ட், பகுதிகள் முழுவதும் குடும்பங்களும்,குழந்தைகளும் இளைஞர்களும் அதிக அளவில் திரண்டு காணப்பட்டனர்.

காலை நேரங்களில் மலைப்பகுதியை சூழ்ந்த பனிமூட்டம் அழகான காட்சியை உருவாக்கியது,பிற்பகலில் மிதமான வெயில் தெரிந்து, ஏற்காட்டின் இயற்கை அழகை அனுபவிக்க சிறந்த சூழல் அமைந்தது. இந்த மாறும் சீதோஷ்ண நிலை சுற்றுலா பயணிகளுக்கு புத்துணர்ச்சி அளிக்க,பலர் புகைப்படங்கள் செல்பி எடுத்து தங்களுடைய அனுபவத்தை பதிவு செய்தனர்.

எப்போதும் கூட்டம் காணப்படும் ஏரிக்கரையில் இந்த வார இறுதியில் விசேஷமாகவே கூட்டம். அதிகமாக,இருந்தது.குடும்பத்தினர்,சிறார்கள், நண்பர்கள் குழுக்கள் எனப் பலர் மிதக்கும் பெடல் படகு, மோட்டார் படகு ஆகியவற்றில் சவாரி செய்து மகிழ்ந்தனர். படகு சவாரியின் போது ஏரியை சுற்றியுள்ள மலைப்பகுதி,மரக்குன்றுகள், குளிர்ந்த காற்று ஆகியவை சுற்றுலாப் பயணிகளுக்கு மறக்க முடியாத அனுபவத்தை அளித்ததாக சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.

ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வார இறுதி நாள் என்பதாலும் கூட்டம் சற்று அதிகம் எனவும் தற்போதைய சீதோசன நிலையால் வரவிருக்கும் விடுமுறை நாட்களில் மேலும் உயரும் எதிர்பார்க்கப்படுகிறது.