சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பாதையில் விபத்துகளைத் தடுக்கும் வகையில் சாலையோர சுழலும் ரப்பர் தடுப்பு உருளைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் இன்று (ஜன.21) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப., கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) லலித்ஆதித்ய நீலம் இ.ஆ.ப. மற்றும் துறைச் சார்ந்த அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், ஏற்காடு மலைப்பாதையில் நடக்கும் சாலை சீரமைப்புப் பணிகள் வரும் மே மாதத்துக்குள் நிறைவடையும். 20 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட மலைப்பாதையில் 8 அபாயகரமான வளைவுகள் உள்ளன. 8 வளைவுகளிலும் ரூபாய் 4 கோடி செலவில் தடுப்பு உருளைகள் அமைக்கும் பணி நடக்கிறது. ஏற்காடு படகு இல்ல ஏரியில் உணவகம் அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.


-SXgDfGgJfO.jpg)