ட்ரெண்டிங்

மேட்டூர் அணை தண்ணீர் திறப்பு 62, நாட்களுக்கு நீட்டிப்பு !!!

 

சேலம் மாவட்டம்,மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு மேலும் 62 நாட்கள் நீட்டிப்பு விவசாயிகள் மகிழ்ச்சி.

மேட்டூர் அணையிலிருந்து ஆண்டுதோறும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் டிசம்பர் 15-ம் தேதி வரை கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது வழக்கம். இதன் மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் டிசம்பர் 15-ம் தேதி வரை 137 நாட்களுக்கு 9 டி.எம்.சி, அளவில் தண்ணீர் திறக்கப்படும். 

இந்நிலையில் மேட்டூர் அணையில் போதிய நீர் இருந்ததால் நடப்பு ஆண்டில் கால்வாய் பாசனத்திற்கு விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று முன்கூட்டியே ஜீலை 1-ல் தண்ணீர்,திறக்கப்பட்டது. இந்நிலையில் இன்று கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் இன்று நிறுத்த பட வேண்டும். இதனிடையே பாசன பகுதிகளில் முழுமையாக நெல் பயிர்கள் விளைச்சல் பெற தண்ணீர் தேவைபடுகிறது. இதனையடுத்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கால்வாய் பாசனத்திற்கான நீர் திறப்பு நாளொன்றுக்கு வினாடிக்கு 400 கன அடி வீதம் இன்று முதல் 15.01.2026 முடிய 62 நாட்களுக்கு நீட்டிப்பு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.இதனால் கால்வாய் பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.