ட்ரெண்டிங்

தேர்தல் பொதுப் பார்வையாளர் சேலம் வருகை! 

சேலம் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் பொதுப் பார்வையாளர் ஜி.பி.பாட்டீல் இன்று (மார்ச் 27) சேலம் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். 

இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர் பிருந்தாதேவி, இ.ஆ.ப. தெரிவித்துள்ளதாவது, இந்திய தேர்தல் ஆணையம் 2024- ஆம் ஆண்டிற்கான மக்களவைப் பொதுத் தேர்தலுக்கான தேர்தல் அட்டவணையை அறிவித்துள்ளது. அதன்படி, மக்களவைப் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19- ஆம் தேதி அன்று நடைபெறவுள்ளது. இதனையொட்டி, மக்களவைப் பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 20- ஆம் தேதி அன்று தொடங்கி, இன்றுடன் மார்ச் 27- ஆம் தேதி நிறைவடைகிறது.

மக்களவைப் பொதுத் தேர்தலையொட்டி, இந்திய தேர்தல் ஆணையத்தால் சேலம் மக்களவைத் தொகுதியின் தேர்தல் பணிகளை கண்காணிக்கும் வகையில் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பொதுப் பார்வையாளர் ஜி.பி.பாட்டீல் இ.ஆ.ப. இன்று (மார்ச் 27) சேலம் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். தேர்தல் பொதுப் பார்வையாளர் ஜி.பி.பாட்டீலின் கைப்பேசி எண் 94899- 39101 மற்றும் மின்னஞ்சல் முகவரி 15salempe@gmail.com ஆகும்.

சேலம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட, தேர்தல் தொடர்பாக தேர்தல் பொதுப் பார்வையாளரை சுற்றுலா மாளிகையில் உள்ள அறை எண் 3- ல் இவரது முகாம் அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் காலை 11.00 மணி வரை அணுகலாம். இவ்வாறு மாவட்டத் தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.