ட்ரெண்டிங்

சேலம் அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் தீ விபத்து.... மீட்புப் பணிகளைத் துரிதப்படுத

 

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சொந்தமான அதிநவீன வசதிகளுடன் கூடிய சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் விபத்துச் சிகிச்சைப் பிரிவு, அவசரப் பிரிவு, மாரடைப்பு உள்ளிட்டவற்றிற்கென்று பிரத்யேகப் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. 

 

இதனால் நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், இந்த அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு வந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த சூழலில், இன்று (நவ.22) காலை 09.45 மணியளவில் சூப்பர் ஸ்பெஷாட்டி மருத்துவமனையின் முதல் தளத்தில் உள்ள பிரிவில் ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக, முதலில் புகை எழுந்த நிலையில், பின்னர் தீ விபத்து ஏற்பட்டது. 

 

இதையடுத்து, தகவலறிந்து வந்த செவ்வாய்பேட்டைத் தீயணைப்புத் துறையினரின் ஒரு குழுவினர் தண்ணீரைப் பீய்ச்சியடிக்க, மற்றொரு குழுவினர், கண்ணாடிகளை உடைத்து உள்ளே சென்று 30 நோயாளிகளைப் பத்திரமாக மீட்டு, வேறு வார்டுகளுக்கு மாற்றினர். 

 

இதனிடையே, நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினர். அத்துடன், மீட்கப்பட்டு வேறு வார்டுகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். 

 

இந்த தீ விபத்து சம்பவம் நோயாளிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.