சினிமா

சினிமாவிலிருந்து பிரேக் எடுக்கும் சமந்தா

பிரபல நடிகை சமந்தா படங்களில் இருந்து ஓய்வு எடுக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. தற்போது சமந்தா நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்து வரும் குஷி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இன்னும் 2-3 நாட்களில் ஷூட்டிங் முடிந்துவிடும் என்றும், அதன்பிறகு சினிமாவில் இருந்து ஓராண்டு காலம் ஓய்வெடுப்பார் என்றும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா, சில மாதங்கள் ஓய்வெடுத்து தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். இப்போது நடிகை சமந்தா படங்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு உடல்நிலையில் கவனம் செலுத்துவார் என்று கூறப்படுகிறது.