சேலம் மாவட்டம் ஏற்காட்டில் குப்பைகளை அகற்ற களத்தில் இறங்கிய ஏற்காடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள்...
சேலம் மாவட்டம் ஏற்காடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தூய்மை பணியை தொடங்கி வைத்த மாவட்ட கூடுதல் ஆட்சியர் உமா நந்தினி..
ஏற்காட்டில் நூற்றுக்கு மேற்பட்ட ஹோட்டல் விடுவிகள் உணவகங்கள் இயங்கி வருகின்றனர்.அதைச் சார்ந்த நிர்வாகிகள் ஊழியர்கள் ஒன்றிணைந்து ஏற்காடு அண்ணா பூங்கா,ஏரி பூங்கா, பிளாஸ்டிக் கழிவுகளை சுத்தம் செய்தனர். மேலும் ஐந்து இடங்களில் குப்பை தொட்டிகள் வைத்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குப்பைத் தொட்டியில் போட வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் மாதம் ஒருமுறை ஏற்காடு சுற்றுலா தளங்களில் தங்கள் சங்கம் சார்பில் மேற்கொள்வோம் என உறுதியற்றனர். மேலும் ஊட்டி கொடைக்கானல் போன்று ஏற்காட்டிலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கூடுதல் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிகழ்வில் ஏற்காடு ஹோட்டல் உரிமையாளர் சங்க தலைவர் விசு காளியப்பன்,செயலாளர்,கார்த்தி மற்றும்,ஜெகன்மோகன்,முரளி,கண்ணன், கௌதம்,கண்மணி ராஜா,மற்றும் ஹோட்டல் நிர்வாகிகள் ஊழியர்கள்,அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டு தூய்மை பணியை மேற்கொண்டனர்.

-(8)-NyRJ8drCyb.jpg )
-SXgDfGgJfO.jpg)