ட்ரெண்டிங்

குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் பேரவையின் அரசு உறுதிமொழி குழு ஆய்வு!

 

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழுத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன், சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகம் இ.ஆ.ப. தலைமையில் சேலம் மாவட்டம், குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் இன்று (நவ.30) காலை 10.00 மணிக்கு ஆய்வு மேற்கொண்டார்.

உயிரியல் பூங்காவில் உள்ள கட்டமைப்புகள், சிறுவர் பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்களின் செயல்பாடுகள், பூங்காவில் உள்ள பறவைகள், விலங்குகளை பராமரிக்கும் முறை உள்ளிட்டவைக் குறித்தும், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறித்தும் குழு ஆய்வுச் செய்தது.

இந்த ஆய்வின் போது, அரசு உறுதிமொழிக் குழு உறுப்பினர்களும், சட்டமன்ற உறுப்பினர்களுமான அண்ணாதுரை, அருள், மோகன், ராமலிங்கம், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அலர்மேல்மங்கை இ.ஆ.ப., சேலம் மாவட்ட வன அலுவலர் கஷ்யப் ஷஷாங்க் ரவி இ.வ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, அரசு உறுதிமொழிக் குழு இணைச் செயலாளர் கருணாநிதி ஆகியோர் உடனிருந்தனர்.