சேலம் மாவட்டத்தில் வேளாண் புத்தாக்க நிறுவனங்கள் அமைத்திட ஆர்வமுள்ளவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி,தெரிவித்ததாவது:
தமிழ்நாடு அரசு நவீன தொழில் நுட்பங்களின் அடிப்படையிலான வேளாண் புத்தாக்க நிறுவனங்களை ஊக்குவிப்பதில் 137 நிறுவனங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இருப்பினும் 90% புத்தாக்க நிறுவனங்கள் எதிர்கொள்ளும் மிக முக்கிய சவால்களில் ஒன்று முதலீட்டு நிதி பற்றாக்குறையாகும்.இதனை கருத்தில் கொண்டு 2024 - 2025 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் வேளாண் தொழில் நுட்ப அடிப்படையிலான புத்தாக்க நிறுவனங்களுக்கு அவற்றின் நோக்கமாகும்.நிலைத்தன்மை மற்றும் வணிகத் திட்டத்தின் அடிப்படையில் முதலீட்டு நிதி ஆதரவு அளித்திட அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்கள்.
இதற்காக மாநில நிதியிலிருந்து ரூபாய் 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வேளாண் புத்தாக்க நிறுவனங்கள் என்பது வேளாண்மை மற்றும் அதனை சார்ந்த துறைகளில் நவீன தொழில்நுட்பங்களின் உதவியோடு விநியோக சங்கிலி மேலாண்மை மற்றும் தளவாடங்களை உருவாக்குதல், விவசாயிகளுக்குத் தேவையான பயிர்ப்பாதுகாப்பு போன்ற வேளாண் இடுப்பொருட்களை வழங்குவதோடு நிபுணர் ஆலோசனை மற்றும் சேவைகளை வழங்கக் கூடிய அலைபேசி அடிப்படையிலான தளம் உருவாக்குதல், தரவுகளின் அடிப்படையிலான துல்லிய பண்ணையம், டிரோன் போன்ற கருவிகள் மூலம் பயிர் பாதுகாப்பு மேற்கொள்ளுதல், அறுவடைக்குப்பித்தைய தொழில்நுட்ப சேவைகளை வழங்கி சந்தைப்படுத்துதலை மேம்படுத்தும் ஒரு வணிக முயற்சியாகும்.இந்த அறிவிப்பின் முக்கிய நோக்கமானது விவசாயிகள் எதிர் கொள்ளும் சிக்கலான சணல்களுக்கு புத்தாக்க நிறுவனங்களின் மூலம் தீர்வு காணுதல், புத்தாக்க நிறுவனங்களின் கண்டுபிடிப்புகளை வளர்ச்சி நிலைக்கு எடுத்துச் சென்று தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் செயல்படுத்துதல் மற்றும் தகுதியான தொடக்க நிறுவனங்களுக்கு நிதியுதவி அளித்து அதன் நிலைத் தன்மையை உறுதி செய்தல் ஆகும்.
இத்திட்டத்தின் கீழ் வளர்ச்சி நிலையில் உள்ள புதிய புத்தாக்க நிறுவனங்கள்) புத்தாக்க நிறுவனங்களுக்கு ரூ.10 இலட்சம் (ஒரு அலகு) மற்றும் சந்தைப்படுத்துதலுக்குரிய தயாரிப்புகளை உருவாக்கும் நிலையில் உள்ள புத்தாக்க நிறுவனங்களுக்கு ரூபாய் 25 இலட்சம் (ஒரு அலகு) நிதி உதவி வழங்கப்படுகிறது. நம் நாட்டு சந்தைக்கு உகந்தவாறு உள்ள புத்தாக்க நிறுவனங்களுக்கு இத்திட்டத்தின் கீழ் மானியம் பெற முன்னுரிமை அளிக்கப்படும் உடனடியாக உண்ணக்கூடிய பொருட்களை தயாரிக்கும் புத்தாக்க நிறுவனங்கள் இத்திட்டத்தில் தகுதியானவை அல்ல.
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் தகுதியான புத்தாக்க நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டு, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் வேளாண் வணிக மேம்பாட்டு இயக்குனரகத்தின் உதவியோடு புத்தாக்க நிறுவனங்களின் தேவைகளான நிதி ஆதரவு, சந்தை இணைப்பு,தொழில்நுட்ப உதவி, கொள்கை ரீதியிலான வழிகாட்டுதல் என அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் கிடைத்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
வேளாண் புத்தாக்க நிறுவனங்கள் அமைத்திட ஆர்வமுள்ளவர்கள் www.agrimark.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்தினை பதிவிறக்கம் செய்து வேளாண்மை துணை இயக்குநர். வோண் வணிகம் சேலம் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். வேளாண் வணிக மேம்பாட்டு இயக்குநரகம், இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ள, விண்ணப்பதாரர்களிடம் இருந்து தகுதியான விண்ணப்பங்களை முதல் கட்ட ஆய்வில் தேர்வு செய்தபின் இத்துறை மூலம் உருவாக்கப்பட்ட மதிப்பீட்டுக் குழுவால் ஆய்வு செய்யப்பட்டு தகுதியான நிறுவனங்கள் தேர்வு செய்யப்படும்.
இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும் நிறுவனமானது நிறுவனச் சட்டம் 2013-ன் கீழ் பதிவு செய்த ஒரு தனியார் நிறுவனமாகவோ, வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மை (Limited Liability Partneship. under Limited Liability Partnership Act 2008), நிறுவன சட்டம் 1932 இன் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனமாகவோ இருக்க வேண்டும். நிறுவனமானது TANSIM அல்லது Startup India ல் பதிவு செய்திருக்க வேண்டும்.கடந்த மூன்று வருடங்களில் சராசரி நிகர வருமானமானது (வருமானவரி தாக்கல் அறிக்கை படி) 5 இலட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.இந்நிறுவனமானது வேலை வாய்ப்பினை உருவாக்குதல், சமூக அக்கறை மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் விதமான தயாரிப்புகள் மற்றும் செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும் நிறுவனமானது ஏற்கனவே தொடங்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து பிரிந்த கிளை நிறுவனமாகவோ அல்லது மறு சீரமைக்கப்பட்டதாகவோ அல்லது மற்றொரு நிறுவனத்தின் கிளை. கூட்டு நிறுவனம், மற்றொரு நிறுவனத்தின் இணை நிறுவனமாகவோ இருத்தல் கூடாது.
மேலும் விவரங்களுக்கு வேளாண்மை துணை இயக்குநர், வேளாண் வணிகம் சேலம் அலுவலர்களை தொடர்பு கொண்டு கூடுதல் தகவல்கள் மற்றும் வழிமுறைகளை பெற்றுக்கொள்ளலாம்,என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.



