ட்ரெண்டிங்

கரபுரநாதர் கோயிலில் எப்போது குடமுழுக்கு?- அமைச்சர் பதில்! 

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று (ஏப்ரல் 15) பேசிய சேலம் மாவட்டம், வீரபாண்டி சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜமுத்து, உத்தமசோழபுரத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற அருள்மிகு கரபுரநாதர் திருக்கோயிலில் வருட கணக்கில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. திருப்பணிகள் எப்போது நிறைவுப் பெற்று குடமுழுக்கு நடைபெறும்? என்று கேள்வி எழுப்பினார். 

இதற்கு பேரவையில் பதிலளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, உத்தமசோழபுரத்தில் உள்ள 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது கரபுரநாதர் திருக்கோயில். இந்த கோயிலில் விரைந்து திருப்பணிகளை முடிக்க இணை ஆணையருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூட்டத்தொடர் நிறைவடைந்ததும் நானும் கோயிலுக்கு சென்று திருப்பணிகளை பார்வையிட்டு பணிகளை விரைவுப்படுத்தப்படும். 

தொடர்ந்து திருப்பணிகள் இந்தாண்டு இறுதிக்குள் முடிக்கப்பட்டு குடமுழுவிற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிவித்தார்.