ட்ரெண்டிங்

சேலம் - வனவாசியில் கைத்தறி பூங்கா அடிக்கல் நாட்டிய அமைச்சர்கள் !!!

 

சேலம் மாவட்டம் வனவாசியில் ரூ 5 கோடி மதிப்பீட்டில் சிறிய அளவிலான பூங்காவினை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் (நவ.07) அடிக்கல் நாட்டில் பணிகளை தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் 86 கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ 37.61 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர். 

நிகழ்ச்சியில் பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.ராஜேந்திரன் தெரிவித்ததாவது :-

தமிழ்நாடு அரசு நெசவாளர்களின் நலனுக்காக ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா சிறிய அளவிலான கைத்தறி பூங்கா திட்டத்தை செயல்படுத்தி நெசவு உற்பத்தியாளர்களின் நலனுக்காக இலவசம் மின்சாரத்தின் அதிகாரத்துடன் 

நெசவாளர்கள் புதிதாக உற்பத்தி செய்யும் வேட்டி சேலைகள் புதிதாக அறிமுகம் செய்யப்படும் துணிகளுக்கு விற்பனை அதிகரிக்க 1.55 கோடி நிதி ஒதுக்கி விற்பனையா அதிகரிக்க சிறப்பு கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். 

தொடர்ந்தும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி பேசியபோது ,2023 - 2024 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டில் 10 இடங்களில் சிறிய அளவிலான கைத்தறி பூங்காக்கள் அமைக்கப்படும்,என அறிவிக்கப்பட்டது.அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டம் தாசக்கம்பட்டி கிராமம் வனவாசி பகுதியில் ரூ.5.கோடி மதிப்பீட்டில் பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டுப் பட்டுள்ளதாக தெரிவித்தார் இந்த பூங்காவில் கைத்தறி நெசவாளர்களுக்கு நவீன கைத்தறி நெசவு உற்பத்தி வசதி வடிவமைப்பு மற்றும் பயிற்சி மையம் ஒருங்கிணைந்த உற்பத்தி மையம் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். இந்த கைத்தறி பூங்காவில் முதற்கட்டமாக 50 கைத்தறிகள் செயல்படக் கூடிய வகையில் நெசவு தொழிற்கூடம் நெசவிற்கு முந்தைய மற்றும் பிந்தைய பணிகளுக்கான அடிப்படை வசதிகள்,மூலப் பொருட்கள் கிடங்கு அலுவலகம் மற்றும் நெசவாளர்களுக்கு குடிநீர் வசதி,சிற்றுண்டி வளாகம்,வாகனம் நிறுத்துமிடம், ஓய்வரை மற்றும் கழிவறை,வசதிகளுடன் கட்டப்பட உள்ளதாக தெரிவித்ததுடன், இதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 150 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்,என கூறினார். 

மேலும் இந்த பூங்காவில் கைத்தறி நெசவாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 800 முதல் 1500 வரை கூலியாக கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.இதன் மூலம் கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரம் மேம்பட்டு, நெசவாளர் சமுதாயத்திற்கு முன்னேற்றத்திற்கும்,பொருளாதார வலிமைக்கும் ஒரு புதிய அடித்தளமாக அமையும் என தெரிவித்தார். 

இதனைத் தொடர்ந்து கைத்தறி ஆதரவு திட்டத்தில் 5 பயனாளிகளுக்கு ரூ.1.08 இலட்சம் மதிப்பீட்டிலும்,சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தில் 53 பயனாளிகளுக்கு ரூ.29.02 இலட்சம் மதிப்பீட்டிலும்,முதியோர் ஓய்வூதிய திட்டத்தில் 8 பயனாளிகளுக்கும், முத்ரா கடனுதவி திட்டத்தில் 15 பயனாளிகளுக்கு ரூ.7.50 இலட்சம் மதிப்பீட்டிலும், 5 மூத்த நெசவாளர்களை கௌரவிப்பு என மொத்தம் 86 கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.37.61 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் கைத்தறி துறை இயக்குநர் திருமதி.மகேஸ்வரி, இ.ஆ.ப.,சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் .டி.எம்.செல்வகணபதி, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்,எஸ்.ஆர்.சிவலிங்கம்,மாவட்ட வருவாய் அலுவலர்,இரா.ரவிக்குமார், கைத்தறித் துறை இணை இயக்குநர் ஆர்.கணேசன்,கைத்தறித் துறை துணை இயக்குநர்,ர.ஸ்ரீதரன் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் கைத்தறி நெசவாளர்கள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.