பயணிகள் மத்தியில் போதிய அளவில் வரவேற்பு இல்லாதது, பயண டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட காரணங்களால் சேலம் வழியாக இயக்கப்படும் 10 சபரி சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜன.24, 31-ல் மௌலா அலி-கோட்டயம் ரயில் (07167), ஜன.25, பிப்.01-ல் கோட்டயம்-மௌலா அலி ரயில் (07168),ஜன.25-ல் மௌலா அலி-கொல்லம் ரயில் (07171) ,ஜன.27-ல் கொல்லம்-மௌலா அலி ரயில் (07172), ஜன.26-ல் கச்சிக்குடா-கோட்டயம் ரயில் (07169), ஜன.27-ல் கோட்டயம்-கச்சிக்குடா ரயில் (07170),நரசாப்பூர்-கொல்லம் ரயில் (07157), ஜன.29-ல் கொல்லம்-நரசாப்பூர் ரயில் (07158), ஜன.28-ல் ஹைதராபாத்- கோட்டயம் ரயில் (07065), ஜன.29-ல் கோட்டயம்- செகந்திராபாத் ரயில் (07066) ஆகிய சிறப்பு ரயில்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.
முன்பதிவு செய்த பயணிகளுக்கு ரயில் கட்டணம் திருப்பி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


