ட்ரெண்டிங்

சேலம் எடப்பாடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் திடீர் ஆய்வு !!!

 

தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (05.11.2025) சேலம் மாவட்டம். எடப்பாடி அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர்,மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் மக்களைத் தேடி மருத்துவம். இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 போன்ற திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்தி தெரிவித்தார்.

அந்தவகையில், இன்றைய தினம் சேலம் மாவட்டம். எடப்பாடி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு,நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்கள். மேலும் புறநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு,அவசர சிகிச்சைப் பிரிவு,காய்ச்சல் பிரிவு,எலும்பு முறிவு சிகிச்சைப்பிரிவு இரத்த சுத்திகரிப்பு மையம்,குழந்தைகள் நலப் பிரிவு,மகப்பேறு சிகிச்சை பிரிவில் ஆய்வு மேற்கொண்டு அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

அதேபோன்று,மருந்து,மாத்திரைகள் வழங்குமிடத்தில் அவசர கால மருந்து. மாத்திரைகள் இருப்பு வைத்திருப்பது குறித்தும் உணவு தயாரிக்கும் கூடம். படுக்கை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்தும் ஆய்வு ஆய்வு மேற்கொண்டு,சிகிச்சைக்கு வந்திருந்த பொதுமக்களிடம் மருத்துவமனையில் வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்ததுடன்,தொடர்ந்து மருத்துவமனையினை சிறந்த முறையில் பராமரித்து பணியாற்றிடும் வகையில் மருத்துவர்களுக்குத் தேவையான அறிவுரைகளை வழங்கி பொதுமக்களிடம் மருத்துவர்கள் செவிலியர்கள் கனிவாக நடந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.