விளையாட்டு

ஜுடா அகாடமி மாணவர்கள் சாதனை!

 

சேலத்தில் குழந்தைகளுக்கான இந்திய சாதனை மற்றும் சேவா உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஜுடா அகாடமியில் பையிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் யுவஸ்ரீ, ரியாஸ்ரீ, விஜய், சுருதி, நகோனிகா, தீப்தி உட்பட 14 பேர் அபாகஸ் கல்வி முறையில் கண்களை கட்டிக்கொண்டு ஒரு மணி நேரத்தில் 600 மனக்கணிதம் மூலம் சரியான விடைகளை கண்டறிந்து இந்திய சாதனை படைத்தனர்.

 

ஃபோனிக்ஸ் பிரிவில் ரியாஸ்ரீ 16 நிமிடத்தில் 1330 எழுத்துக்களையும், கிருஷ் ணன்யா 27 நிமிடத்தில் 307 எழுத்துக்களையும் கூறி உலக சாதனை படைத்தனர். மேலும் இப்பிரிவில் மகிழன், கவிநிலா உள்ளிட்ட 5 பேர் உலக சாதனை படைத்தனர். சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு சேலம் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.

 

நிகழ்ச்சியில் அகாடமியின் நிறுவனர் செல்வராஜன் ஜீவா, இணை நிறுவனர் வினோத்குமார், நிறுவன இயக்குனர் ஜெயந்தி வினோத்குமார் உட்பட ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளின், பெற்றோர்கள் மற்றும் ஜுடா அகாடமியில் பயிலும் ஏராளமான குழந்தைகள் கலந்து கொண்டனர்.