ட்ரெண்டிங்

விவசாயம் செய்யவிடாமல் இடையூறு செய்வதாக விவசாயிகள் வேதனை!

 

பா.ஜ.க. நிர்வாகி தங்களைத் தொடர்ந்து அச்சுறுத்தி வருவதாக சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் விவசாயிகள் புகார் மனு அளித்துள்ளனர்.

 

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த சகோதரர்களான கிருஷ்ணன், கண்ணையன் ஆகியோருக்கும், சேலம் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. பொறுப்பாளர் குணசேகரனுக்கும் இடையே நிலப்பிரச்சனை இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில், வயதான இருவரையும் குணசேகரன் விவசாயம் செய்யவிடாமல் இடையூறு செய்வதாகக் கூறப்படுகிறது.

 

இந்த விவசாயிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பா.ஜ.க. நிர்வாகி குணசேகரன் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, அமலாக்கத்துறையை ஏவிவிட்டதாகவும் புகார் எழுந்தது.

 

இந்த நிலையில், குணசேகரன் தங்களைத் தொடர்ந்து அச்சுறுத்தி வருவதாகவும், தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரியும் விவசாயிகள் கிருஷ்ணன், கண்ணையன் ஆகியோர் சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலனை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

 

அப்போது, பா.ஜ.க. நிர்வாகியால் தங்கள் நிலத்திற்கு ஆபத்து இருப்பதாகவும், விவசாயிகள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.