ட்ரெண்டிங்

ஓமலூரில் அதிக மகசூலைக் கண்ட சின்ன வெங்காய பயிர்!

ஓமலூரில் அதிக மகசூலைக் கண்ட சின்ன வெங்காய பயிர்! 

ஓமலூர் வட்டாரத்தில் சின்ன வெங்காயம் பயிர் அதிக மகசூலைக் கண்டுள்ளது. 

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி, தாரமங்கலம், ஓமலூர் உள்ளிட்டப் பகுதிகளில் சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது அவை நல்ல மகசூல் கண்டுள்ளதால் விவசாயிகள் அறுவடைக்கு தயாராகி வருகின்றனர். 

அதேநேரம், சின்ன வெங்காயத்திற்கு சந்தையில் விலைக் குறைவாக நிர்ணயிக்கப்படுவதால், அவற்றை விற்பனைக்கு அனுப்பாமல் பதப்படுத்தத் தயாராகியுள்ளனர். விலை உயரும் போது விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.