ட்ரெண்டிங்

பெட்ரோலுக்கு மாநில அரசு ரூபாய் 54 வரி விதிப்பு என்பது வதந்தி!

 

பெட்ரோலுக்கு மாநில அரசு ரூபாய் 54 வாட் வரி விதிப்பதாகப் பரவும் தகவல் வதந்தி என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 

கடந்த 2022- ஆம் ஆண்டு ஏப்ரலில் பெட்ரோல் விலை லிட்டர் ரூபாய் 110.85 ஆக இருந்த போது, மாநில அரசின் வாட் வரி ரூபாய் 22.54 ஆக இருந்தது. அதேபோல், கடந்த 2022- ஆம் ஆண்டு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மத்திய அரசின் கலால், செஸ் வரியாக ரூபாய் 27.9 ஆக இருந்தது. 

பா.ஜ.க.வின் துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம், தமிழ்நாட்டில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மத்திய அரசு விதித்துள்ள வாட் வரி இவ்வளவு, தமிழ்நாடு அரசு விதித்துள்ள வாட் வரி இவ்வளவு என்று குறிப்பிட்டு போர்டு வைக்க வேண்டும். அதேபோல், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு வாட் வரியாக தமிழ்நாடு 54 ரூபாயை விதித்துள்ளது எனத் தெரிவித்திருந்த நிலையில், தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.