ட்ரெண்டிங்

சேலத்தில்-அரசு திட்டங்களை தொடங்கி வைத்த அமைச்சர் !

 

சேலம் மாவட்டம், கன்னங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கியும், கன்னங்குறிச்சி பேரூராட்சி பகுதிகளில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், கே.கொண்டப்பநாயக்கன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தால் நடத்தப்பட்டு வரும் பெரியார் நகர் நியாய விலை கடையை சுற்றுலாத்துறை அமைச்சர்,ராஜேந்திரன்,திறந்து வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:

சேலம் மாவட்டத்தில் 2025-2026 ஆம் கல்வி ஆண்டிற்கான மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவிபெறும் 178 பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயிலும் 11,317 மாணவர்களுக்கும். 13,842 மாணவிகளுக்கும் ஆக மொத்தம் 25,159 மாணாக்கர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. இன்றையதினம், கன்னங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் 100 மாணவர்களுக்கும். 52 மாணவியர்களுக்கும் என மொத்தம் 152 மாணவ, மாணவியர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் கன்னங்குறிச்சி பேரூராட்சி, மோட்டாங்குறிச்சி. கேசவன் நகர், டி.கே.வெங்கடாசலம் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.105 கோடி மதிப்பீட்டில் தார்சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய்க்கான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து,சேலம்,கே.கொண்டப்பநாயக்கன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தால் நடத்தப்பட்டு வரும் பெரியார் நகர் நியாய விலைக் கடைக்கு 2024-2025 சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டிமுடிக்கப்பட்டு கட்டடம் திறந்து வைக்கப்பட்டது. இதன்மூலம் சின்னக்கொல்லப்பட்டி, பெரியார் நகர். கோம்பைபட்டி, சாந்திநகர், அன்னை இந்திரா நகர், என்.ஜி.ஜி.ஓ காலனி மற்றும் இராஜகணபதி நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 1153 குடும்ப அட்டைதாரர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் எப்பொழுதும் மாணவர்கள், பொதுமக்கள், விவசாயிகள், நெசவாளர்கள் ஆகியோரின் நலனை கருத்தில் கொண்டு செயல்பட்டு வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர்,ராஜேந்திரன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சேலம் மாநகராட்சி மேயர்,ராமச்சந்திரன்,கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திருமதி பொன்மணி.சேலம் மாநகராட்சி துணை மேயர்,சாரதாதேவி.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர்,ராஜ்குமார். உதவி இயக்குநர்(பேரூராட்சிகள்),சுலைமான் சேட் உள்ளிட்ட அரசு அலுவலர்கள்,மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.